புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (20:51 IST)

காங்கிரஸ் ஒரு பொய் பல்கலைக்கழகம்: கடுமையாக தாக்கும் பிரதமர் மோடி

காங்கிரஸ் ஒரு பொய் பல்கலைக்கழகம் என்றும், அதில் பொய் கூறுபவர்களுக்கு மட்டுமே பதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் உள்ளது. பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரா கூட்டமொன்றில் பேசியபோது, 'ஹிந்து மதம் குறித்து தனக்கு பெரியளவில் அறிவு உள்ளது என்று தான் என்றுமே கூறிக்கொண்டதில்லை என்றும், தான் ஒரு சிறிய உழைப்பாளி மட்டுமே என்றும் தெரிவித்தார்.  

 
மேலும் பொய்களின் பல்கலைக்கழகமாக காங்கிரஸ் மாறியுள்ளதாகவும் அந்த கட்சியில் யார் அதிகமாக பொய் சொல்கிறார்களோ, அவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும் என்றும் பொய் பேசுவதற்கான சிறந்த திறன் ராகுல் காந்தியிடம் உள்ளதாகவும் மோடி கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் கனவு அனைத்து மாநிலங்களிலும், சிதைக்கப்பட்டதாகவும், ராஜஸ்தான் மாநிலத்திலும் அதே போன்றுதான் நடக்கப்போகிறது என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும் என ஒருசிலர் கூறிவருவதாகவும், ஆனால், வர இருக்கும் தேர்தலில் அது தவறு என்பது நிரூபிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.