Daily Horoscope
✕

சென்னைக்கு கிழக்கே மையம் கொண்ட அம்பன் – அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 18 மே 2020 (16:00 IST)
சென்னைக்கு கிழக்கே வங்க கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் தீவிர நிலையை அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் தீவு பகுதிகளிடையே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது, இதற்கு அம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. புயலின் வீரியத்தை அளவிட அவற்றிற்கு தீவிர புயல், அதி தீவிர புயல் போன்ற தரவரிசை பெயர் வழங்கப்படுகிறது. இதில் அம்பன் புயல் உச்சக்கட்ட நிலையான அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா முதல் வங்க தேசத்திற்கு இடையேயான பகுதியில் அம்பன் கரையை கடக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று, மாறாக தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை பொழிவும், காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

உல்லாசமாக இருந்தார்.. திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் புகார்!...

தமிழில் வருகிறது ரிபப்ளிக் செய்தி சேனல்.. அர்னாப் கோஸ்வாமி தகவல்..

அரசு ஊழியர்கள் சொத்துக்கணக்கை காட்ட அக் 31 கடைசி தேதி.. இல்லையேல் புரமோஷன் இல்லை..

பேருந்தில் பெண்களுக்கு இலவசம்.. ஆண்களுக்கு கட்டண குறைப்பு.. இதுதாண்டா மாற்றம்...!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க முக்கிய முடிவு.. 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments