1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (16:34 IST)

ஜூலை 31க்குள் அனைத்து காப்பகங்களும் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து குழந்தைகள், முதியோர் இல்லங்கள் காப்பகங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தன்னார்வ மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் காப்பகங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய கால கெடு கொடுத்து தமிழக அரசு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. காப்பகங்கள் பதிவு தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது
 
சமீபத்தில் மதுரையில் இயங்கிவந்த காப்பகம் ஒன்றில் காப்பகத்தில் நடத்தியவர்கள் குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு அந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்தது என்று நாடகமாடினார் என்பதும் அதன் பின்னர் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அந்த காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது