திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (14:52 IST)

ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் எதிர்ப்பு!

ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் கலையுலக கருத்து சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கருத்து.

 
மத்திய அரசு சமீபத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஏற்கனவே சட்டமாக அமலில் இல்லாமல் வழிகாட்டுதலாக மட்டும் உள்ள ஒளிபரப்பு விதிமுறைகளை சட்டமாக மாற்ற மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த கருத்துகளை தெரிவிக்க இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.
 
இந்நிலையில் மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு திரைக்கலைஞர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து, ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது கலையுலக கருத்து சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.