திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (20:15 IST)

செய்தியாளரை தாக்கிய அஜித் மேனேஜர்: பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்!

press club
செய்தியாளரை தாக்கிய அஜித் மேனேஜர்: பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்!
தனியார் ஊடகம் ஒன்றின் செய்தியாளரை அஜீத் மேனேஜர் தாக்கியதாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நயன்தாராவுடன் திருமணம் மற்றும் சில விவரங்களை தெரிவித்தார். 
 
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தனியார் ஊடகம் ஒன்றின் செய்தியாளரை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் தள்ளி மிரட்டியதாக தெரிகிறது
 
இந்த அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது