அஜித்தின் ‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்த பிரபல நடிகர்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!
அஜித்தின் ஏகே 61 படப்பிடிப்பை முடித்த பிரபல நடிகர்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!
அஜித் நடித்து வரும் ஏகே 61 என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக பிரபல நடிகர் வீரா தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த மனிதருடன் சில நாட்கள் பழகிய பிறகு நல்ல தோற்றமும், நல்ல குணமும் மட்டுமே அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். பலவருட ரத்தம், வியர்வை, மரியாதை, கடும் உழைப்பு, ஆர்வம், நேர்மை, நம்பிக்கை போன்றவையே அவரை மகத்தான நட்சத்திரமாக மாற்றியுள்ளது.
அன்புள்ள ஏகே சார், நாம் மீண்டும் சந்திக்காமல் போனால் தற்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கி உள்ளீர்கள்.
நான் பழகிய நாட்களில் நீங்கள் நீங்களாக இருந்து என்னையும் இயல்பில் இருக்க விட்டீர்கள். உங்களை சுற்றி உள்ள எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என நீங்கள் விரும்புவது போல் உங்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.