1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (11:42 IST)

பொதுக்குழு விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு!

panner
அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
நேற்று அதிமுக பொதுக்குழு கூடிய நிலையில் நேற்று இரவு டெல்லி சென்ற ஓ பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பொதுக்குழு குறித்து மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட முடிவு செய்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் அவர் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது