திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (15:56 IST)

சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நிற்கும் எடப்பாடியார்? – ஓபிஎஸ் தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு!

OPS EPS
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சலசலப்பில் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சர்வதிகாரி போல செயல்படுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. ஆனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்பினர் இடையேயும் கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் உள்ளிட்டோர் “அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அவைத் தலைவர் அறிவித்துள்ளார். ஆனால் அதற்கு அவைத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. 23 தீர்மானங்களையும் ரத்து செய்திருக்கிறார்கள். அதற்கும் அவர்களுக்கு உரிமை கிடையாது. பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டதாக போலியான கடித்ததை காட்டினார்கள்.

மேலும், இன்றைய பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவை மீறி ஒற்றைத் தலைமை குறித்து பேசியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். எடப்பாடி பழனிசாமி கட்சியில் ஒரு சர்வதிகாரி போல செயல்படுகிறார்” என கூறியுள்ளனர்.