வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (13:02 IST)

அதிமுக தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்- இலச்சினை வெளியீடு!

admk
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிமுக கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது சிலைக்கு, புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாலருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும்,  நாம் அனைவரும்  இன்று முதல் பகல் இரவு பாராமல்   அயராது உழைப்போம். 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதையும் உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
 
மேலும்,மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அதிமுக கூட்டணியை அறிவிப்போம். தேர்தல் பரப்புரையை இன்று முதல் தொடங்கத்திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
 
தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழர் உரிமையை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற வாசகத்துடன் இலட்சினையையும் ஏஐ தொழில் நுட்பம் மூலம் ஜெயலலிதா  பேசுவது போன்ற  காணொலியையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.