வேலுமணியை அடுத்து ஜெயகுமார் வீட்டில் ரெய்டு: அமைச்சர் நாசர்
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடுகளில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வசிக்கும் இடங்களிலும் அதிரடியாக சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்
இந்த சோதனையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன
இந்த சோதனை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வேலுமணியை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் சோதனை செய்யப்படுகிறது என்றும் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் தவறு செய்யவில்லை என்றால் அவர்கள் தங்களது நேர்மையை நிரூபித்து காட்டலாம் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் வீட்டில் ரெய்டு செய்யப்படும் என்று வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது