1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (13:13 IST)

மு.க. ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

மு.க. ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் விமர்சனம்
எஸ்.பி. வேலுமணி மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார் என்று வானதி சீனிவாசன் பேட்டி. 

 
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார் என்று கோவை தெற்கு தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
 
வேலுமணி வீட்டில் ரெய்டு மற்றும் தொடர் நடவடிக்கைகள் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூடிய நடவடிக்கை என்று அவர் விமர்சித்துள்ளார். தமிழக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.கவின் சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்திய நிலையில், அவரது கோவை வீட்டில் மாலை 5.30 மணியளவில் சோதனையை அதிகாரிகள் நிறைவு செய்தனர்.