திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மே 2024 (13:40 IST)

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி: பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு..!

school student
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்க அறிவிப்பை பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அடுத்த கட்டமாக மேல் படிப்புக்கு மாணவர்கள் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர் என்பதும் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
ஜூன் 4ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற இருப்பதை அடுத்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
ஜூன் 4ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் வாக்கு எண்ணும் பணி முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார் 
 
Edited by Siva