செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மே 2024 (08:31 IST)

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளே மாணவ மாணவிகளுக்கு பாட நூல்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு தர வேண்டிய நோட்டுகள் புத்தகங்கள் ஆகியவை மே 31ஆம் தேதிக்குள் விநியோக மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்றும் புத்தகங்கள் நோட்டுகள் தேவையான அளவில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடநூல்கள் நோட்டுகள் பெறப்படவில்லை என்றால் உடனடியாக பள்ளிக்கல்வித்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நோட்டுகள் மற்றும் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளி திறக்கும் ஜூன் மூன்றாம் தேதி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva