நேற்று மதுரையில் எழுச்சி, இன்று உசிலையில் திரட்சி: கமல்ஹாசன் டுவீட்
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் என்பது தெரிந்ததே
நேற்று மதுரையில் சூறாவளிப் பிரச்சாரம் செய்த கமலஹாசன் இன்று காலையும் மதுரையின் முக்கிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அவர் செல்லும் இடங்களெல்லாம் கடல் அலைகள் போல் மக்கள் கூட்டம் குவிந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டம் அனைத்தும் கமல்ஹாசனுக்கு ஓட்டாக மாறினால் நிச்சயம் அவர்தான் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று மதுரையில் சூறாவளிப் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் இன்று உசிலம்பட்டிக்கு சென்று தெருத்தெருவாக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ழுச்சிக்கு முன்னுரை எழுதியாகிவிட்டது.நேற்று வைகை நகரில், @maiamofficial இன் கூட்டத்தில் கடலலைகள் பார்த்தீர்கள். இன்று உசிலம்பட்டித் தெருக்களில், ஊழலுக்கு எதிரான திரட்சியைப் பார்க்கிறேன். இன்னும் இடையூறு செய்யுங்கள்... தடைகளைத் தாண்டி எங்கள் மடைகள் பாயும். #சீரமைப்போம்_தமிழகத்தை என்று பதிவு செய்துள்ளார்
திமுக அதிமுக இரண்டு பெரிய கட்சிகளுமே இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காத நிலையில் முதல் நபராக கமலஹாசன் முந்திக்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது