1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (19:19 IST)

மக்கள் நீதி மையமும் ஆன்மீக அரசியலும் இணையுமா? கமல்ஹாசன் பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் மதுரையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன என்பதும் அதற்கு அவர் சொன்ன பதில் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யமும், ஆன்மீக அரசியலும் ஒன்று சேருமா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன் ’வரும் தேர்தலில் ஏற்கனவே இருந்த அணிகள் பிளவுபடும் என்றும், புதிய அணிகள் உருவாகும் வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
 
மேலும் மக்கள் நீதி மய்யமும் ஆன்மீக அரசியலும் இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசனின் இந்த பதிலை அடுத்து இப்போதைக்கு ரஜினி கமல் இணைந்து தேர்தலை சந்திக்க வில்லை என்பதுதான் நிலையாக உள்ளது