1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (12:33 IST)

நீட் விவகாரத்தில் திமுகவுக்கு அதிமுக துணை நிற்கும் - விஜயபாஸ்கர் பேட்டி

நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி. 

 
நீட்தேர்வு எதிர்ப்பை வலியுறுத்த அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசியதாவது, நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினோம். ஆனால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார் என்றார்.
 
மேலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று கூறினார்.