வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (17:02 IST)

விளவங்கோடு சட்டமன்ற தேர்தல்.. அதிமுகவை பின்னுக்கு தள்ளியது நாம் தமிழர் கட்சி..!

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடந்த போது விளவங்கோடு சட்டமன்ற தேர்தலுக்கும் இடைத்தேர்தல் நடந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட கத்பெர்ட்  என்பவர் 57475 வாக்குகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளர் நந்தினி உள்ளார் என்பதும் அவர் 28756 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெமினி என்பவர் உள்ளார் என்பதும், அவர் 4456 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நான்காவது இடத்தில் தான் அதிமுக வேட்பாளர் ராணி என்பவர் வெறும் 3193 வாக்குகள் பெற்று உள்ளார். தமிழக வரலாற்றில் முதல் முறையாக அதிமுகவை பாரதிய ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும்   நான்காவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva