திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம்! – ட்ரெண்டாகும் #திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா
தமிழகத்தில் திமுக ஆட்சியில் செயல்பாடுகளை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியமைத்த நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுகவை கண்டித்தும், மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி இன்று அதிமுக தமிழக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்கட்சி தலைவர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் #திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.