திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (19:48 IST)

மே 7ஆம் தேதி அதிமுக சட்டமன்ற கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு!

தமிழகத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இந்த தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக அதிமுக எதிர்க்கட்சியாகவும் மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்த நிலையில் தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தலைமை கழகத்தில் மே 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 04.30க்கு  நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்
 
இந்த கூட்டத்தில் அதிமுகவின் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது