புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (18:42 IST)

பாஜகவின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும்: ஸ்டாலினுக்கு எல்.முருகன் கடிதம்!

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு பாஜகவின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் சற்று முன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார் 
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள்
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான ஆதரவை பெற்று திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு தமிழக பாஜகவின் சார்பில் எனது மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
 
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக மக்களின் உயர்வுக்கு தாங்கள் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பாஜக பாரதிய ஜனதா கட்சியின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முருகன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்