1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (18:39 IST)

வெற்றி பெற்ற அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை!

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்பதும் எதிர்க்கட்சி அந்தஸ்தை அதிமுக பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் வெற்றி பெற்ற அமைச்சர்களை நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார் 
 
வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பதும் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி கருப்பண்ணன், கே.பி.அன்பழகன், முனுசாமி, சேவூர் ராமசந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர் 
 
தமிழக சட்டமன்றத்தில் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட எப்படி? மக்கள் நலப் பிரச்சனைகளில் குரல் எழுப்புவது எப்படி? என்பது குறித்த ஆலோசனையை அவர்கள் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது