திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (10:11 IST)

அதிமுகவில் அதிரடி மாற்றங்கள்? ஜுலை 14 அமைச்சரவை கூட்டம்!

வரும் ஜூலை 14 ஆம் தேதி தலைமை செயலகத்தில் அதிமுக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திடீர் ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.  
 
சுமார் 4 மணி நேரம் நீடித்த அந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவில் கட்சி நிர்வாக ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து தற்போது வரும் ஜூலை 14 ஆம் தேதி தலைமை செயலகத்தில் அதிமுக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்தோ அல்லது கடந்த வாரம் ஐவர் குழு நடத்திய ஆலோசனைகள் குறித்தோ முடிவெடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.