செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (13:50 IST)

மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர்; திமுகவை கேலி செய்த அதிமுக அமைச்சர்

திமுக உறுப்பினர்கள் இன்று சட்டசபைக்கு சென்றனதை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக எம்.எல்.ஏ.க்களை மாப்பிள்ளைகள் என குறிப்பிட்டு கேலி செய்துள்ளார்.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபைக்கு வரபோவதில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
அதைத்தொடர்ந்து அண்ணா அறிவாயலத்தில் திமுக சார்பில் போட்டி சட்டமன்றம் நடத்தப்பட்டது. இதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி கலந்துக்கொண்டனர். இந்நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் சட்டசபை கூடியது.
 
இதில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கலந்துக்கொண்டனர். இதுகுறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
 
முறுக்கிவிட்டு போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர். 4 நாட்கள் சட்டசபையில் கலந்துக்கொள்ளாமல் திமுகவினர் வீணடித்துவிட்டனர். எவ்வளவோ பிரச்சனைகளை விவாதித்திருக்கலாம். தற்போது ஜனநாயக கடமையாற்ற வரும் திமுகவை வரவேற்கிறோம். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று கூறினார்.