1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified செவ்வாய், 3 மார்ச் 2020 (16:48 IST)

ஆட்சி கலைப்பு என்ன கரு கலைப்பா? கடுப்பான செல்லூரார்!!

தமிழக அரசை யாராலும் கலைக்க முடியாது என்று கூறியுள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக பேட்டியளித்துள்ளார். 
 
தமிழக சட்டசபையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கோரிவருகிறார். அப்படி சிஏஏ-வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் எச்.ராஜா.  
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர் கூறியதாவது, யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சியைக் கலைப்பது என்பது கருக்கலைப்பு போன்று நினைத்து விட்டார்களா எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.