திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (18:23 IST)

”ஊழலில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கட்சி அதிமுக”.. விளாசும் துரைமுருகன்

விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன்  பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரான நா.புகழேந்தியை ஆதரித்து பேசிய திமுக பொருளாளர் துரை முருகன், “அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கட்சி தான், ஆனால் ஊழலில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கட்சி” என கூறியுள்ளார்.

முன்னதாக இது போல் அதிமுகவினரை தனது நகைச்சுவை உணர்வோடு விமர்சித்து வரும் துரைமுருகன், தற்போதும் அதே பாணியில் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.