1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (12:56 IST)

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு! உயர் கல்வித்துறை ஒதுக்கீடு!

Raja Kannapan
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர் கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனை பெற்றதால் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தார். இந்நிலையில் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.