அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதலாக ஊதியம்- அமைச்சர் பொன்முடி
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழ் நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதலாக ஊதியம் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அரசுக் உள்ள அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதலாக ஊதியம் வழங்கப்படும்.
கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கூறினார்.
உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆண்டுக்கு ஒருமுறை மா நிலத் தகுதித்தேர்வு (slet) நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழக விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி ஒரே மாதிரியாக ஊதியம், தகுதி உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.