திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 17 ஜூன் 2018 (15:02 IST)

நீக்கப்பட்ட பதிவை பரப்பி என்னை காயப்படுத்தாதீங்க; கஸ்தூரியின் மன்னிப்பு வீடியோ

நடிகை கஸ்தூரி டுவிட்டர் பக்கத்தில் திருநங்கைகளை குறிப்பிட்ட பதிவுக்கு ஃபேஸ்புக் வீடியோவில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
நடிகை கஸ்தூரி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். அதில் 9ஐ குறிப்பிடும் விதமாக திருநங்கைகள் புகைப்படம் இடம்பெற்றது. 
 
இதனால் திருநங்கைகள் சார்பில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. திருநங்கைகள் பலரும் கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகை கஸ்தூரி அந்த பதிவை நீக்கியதுடன், மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
 
ஆனால் அவரது பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து பலரும் அதை பயன்படுத்தி கஸ்தூரி குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில் அவரது பதிவிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்டதுடன், நீக்கப்பட்ட பதிவை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம். இதன்மூலம் என்னை காயப்படுத்த வேண்டாம். இப்போது விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.