வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூன் 2018 (09:02 IST)

இன்ஜினீயரைத் தாக்கி தங்க செயின் பறித்த திருநங்கைகள் கைது

சென்னை வண்டலூரில் இன்ஜினீயரைத் தாக்கி தங்க செயின் பறித்த 3 திருநங்கைகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் ஒருவர் பணி முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் உட்பட 5 பேர் அந்த இன்ஜினீயரிடம் செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். அவரை துரத்திய திருநங்கைகள், இன்ஜினீயரைக் கத்தியால் கொடூரமாக தாக்கி அவரிடமிருந்த தங்கச் செயின், வாட்ச், செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
 
இதனையடுத்து அந்த இன்ஜினீயர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போலீஸார், இன்ஜினீயரைத் தாக்கி திருடிய 3 திருநங்கைகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.