Daily Horoscope
✕

கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் சம்பந்தம் இல்ல - நீதிமன்றத்தில் சொன்ன நிஷாந்த்...

Updated: வியாழன், 19 நவம்பர் 2026 (18:03 IST)
சமீபத்தில் மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நிஷாந்த் என்கிற வாலிபர் 11.3 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றார். அந்த சம்பவத்தில் மதுரை சேர்ந்த யுடியூபர் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரிடத்திலிருந்து புதைக்கப்பட்டிருந்த 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டது.

அதன்பின் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணித்த போது போலீசார் அவரை கைது செய்தனர். இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்..

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அப்போது நகை கொள்ளை சம்பவத்திற்கும் மீனாட்சி மற்றும் தனது தந்தைக்கும் தொடர்பில்லை என நீதிபதியிடம் நிஷாந்த் கூறினார். அதற்கு  ‘கொள்ளை வழக்கில் யாருக்கு தொடர்பு என இப்போது பேசக்கூடாது’ என நீதிபதி கூறினார். மேலும், போலீஸ் கஸ்டடி குறித்த மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடைபெறுவதாகவும் நீதிபதி கூறினார்.

நிஷாந்த் சுயநினைவுடன் பல நாட்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை செய்துள்ளார் எனவும், மதுரை நகை கொள்ளை முக்கியமான வழக்கு என்பதால் அவரை காலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. அதன்பின் நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதி அனுமதி கொடுத்தார். மேலும், நிஷாந்தை துன்புறுத்தக்கூடாது, வழக்கறிஞரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது.
<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

எதிரிக்கு எதிரி நண்பன்.. விஜய்யை எதிர்க்க பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக...

பிரபாகரன் வீட்டிற்கு சென்ற திருமாவளவன்.. பாஜக கண்டனம்.. காங்கிரஸ் மெளனம்....

வி.எஸ்.பாபு மறைவு!.. முதல்வரின் திருச்சி பயணம் ரத்து...

டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்கள் திடீர் போராட்டம்.. ரூ.300 கட்டணம் ரூ.800 வரை உயர்ந்ததால் அதிர்ச்சி....

ஷாக்கிங்கா இருக்கு!.. வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments