வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:02 IST)

தேர்தல் தேதி அறிவிப்பில் அதிகார துஷ்பிரயோகம்- விஜயகாந்த் அறிக்கை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

எனவே, கால அவகாசம் வழங்காகதை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  தியர்தல் தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதில் ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் எனத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பிலேயே அதிகார துஷ்பிரயோகம் இருக்கிறது . ஜன நாயக நாட்டில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில், மக்கள் மனதில் இடம்பெற்ற தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும், சிலைகளை உடைத்து சேதப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் சமூக விரோதிகள் மீது, இதுபோன்ற சம்பவங்கள்  இனி நடைபெறாத வண்ணம்தமிழகஅரசு@CMOTamilnaduகடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளர்.