Daily Horoscope
✕

ப்ளீஸ்.. என்னை யாராவது ஜாமீனில் எடுங்க - சிறையில் கதறும் அபிராமி

Updated: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (18:00 IST)
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். 

 
பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், அவரின் கள்ளக்காதலன் சுந்தரமும் கூட்டு சதி பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
சிறையில், அவ்வப்போது தியானம், யோகா என பொழுதை கழித்தாலும், யாரிடமும் பேசாமல் தனிமையை விரும்பும் அபிராமி, அடிக்கடி அழுது கொண்டே இருக்கிறாராம். அவரின் பெற்றோர்கள் உட்பட அவரின் உறவினர்கள் யாரும் இதுவரை அவரை சிறையில் சென்று பார்க்கவில்லை. எனவே, வேதனை அடைந்துள்ள அபிராமி, என் உறவினர்கள் யாரிடமாவது கூறி என்னை ஜாமீன் எடுக்க சொல்லுங்கள் என சிறை அதிகாரிகளிடம் கதறி வருகிறாராம்.
 
அபிராமியின் கொடூர செயலால் இரண்டு குழந்தைகளை இழந்து ஒருபக்கம் கணவர் விஜய் தவித்து வரும் நிலையில் தனது மகளின் செயலால் வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் அவரின் பெற்றோர் உள்ளனர். அபிராமி மீது கடுமையான கோபத்தில் இருக்கும் அவர்கள், அவளுக்காக ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க மாட்டோம் என ஏற்கனவே கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வாட்ஸ்அப் மெசேஜை இனி ஷெட்யூல் செய்தும் அனுப்பலாம்.. 10 நிமிடம் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்ய வசதி...

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை.. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதா?

ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதி. மாலத்தீவை சேர்ந்த 2 விமானிகள் கைது.. அதிர்ச்சி தகவல்...

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் 3 தலைவர்கள் கைது.. சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments