1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (15:04 IST)

குழந்தைகளைக் கொல்ல சுந்தரத்துடன் சேர்ந்து பிளான் போட்ட அபிராமி - வெளியான அதிர்ச்சி ஆடியோ

அபிராமி குழந்தைகளை கொன்றுவிட்டு அவளது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டார்.
 
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளை கொலை செய்த அபிராமியும், அவளுக்கு உடந்தையாக இருந்த சுந்தரமும் தற்பொழுது ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
அபிராமியின் கணவரும், குடும்பத்தை விட காதல் கணவர் தான் முக்கியம் என வீட்டிலிருந்து வெளியேறி சுந்தரத்தை கரம்பிடித்த அவரது மனைவியும் நிர்கதியாய் தவிக்கின்றனர்.
 
இதற்கிடையே சுந்தரம் அளித்த வாக்குமூலத்தில், நான் அபிராமியுடன் கள்ளத்தொடர்பில் இந்தது உண்மைதான். ஆனால் குழந்தைகளைக் கொன்றதில் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என ஒன்றும் தெரியாதது போல தெரிவித்திருந்தான்.
 
இந்நிலையில் அபிராமி குழந்தைகளை கொன்றவுடன், சுந்தரத்திடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு இருவரும் கேசுவலாக பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.