Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

Written By Mahendran
Updated: சனி, 17 டிசம்பர் 2022 (11:29 IST)
நெய் விலையை தொடர்ந்து வெண்ணை விலையும் உயர்வு: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆவின் நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனால் ஒரு லிட்டர் பிரிமியம் நெய் 630 ரூபாயில் இருந்து ரூ.680 என அதிகரித்தது.
 
கடந்த ஒன்பது மாதங்களில் மூன்று முறை ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
500 கிராம் ஆவின் வெண்ணெய் 250 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 260 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நெய் மற்றும் வெண்ணெய்  விலை உயர்வு பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

விஜயின் 100 நாள் ஆட்சி!.. ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்‌ஷன்...

30 வருஷத்துக்கு முன்னாடி வெறும் சைக்கிள்!.. இப்ப கோடீஸ்வரர்!.. சட்டசபையில் தெறிக்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!..

4,133 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.. ஆனால் 19,502 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.. எப்படி?

கர்நாடகத்தில் நடந்தது போலி என்கவுண்டரா? 3 தமிழர்களின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்..

கார் முழுவதும் காதலியின் 3400 முத்தம்!... போலீசாரிடம் சிக்கிய வாலிபர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments