புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (08:54 IST)

சரமாரியாக அடித்த பெண்கள்: அவமானத்தில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்

ஈரோடு மாவட்டம் பவானியில் பெண்கள் தாக்கியதால் வாலிபர் ஒருவர் அவமானத்தில்  தற்கொலை செய்துகொண்டார்.
 
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டியை சேர்ந்தவர் பானுமதி. இவரது மகன் சக்திவேல் (28). சக்திவேலின் தாய் மருத்துவ செலவிற்காக சுய உதவி குழுவில் பணம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாமல் சக்திவேல் தவித்து வந்ததாக தெரிகிறது.
 
இதனால்  சுய உதவி குழுவை சேர்ந்த திலகவதி, அம்பிகா, கனகா ஆகிய 3 பேர் சக்திவேலின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் அந்த பெண்கள் சக்திவேலை கட்டையால் தாக்கினர். இதனால் மனவேதனையில் இருந்த சக்திவேல் வி‌ஷம் குடித்தார்.
 
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து திலகவதி, அம்பிகா, கனகா ஆகிய 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.