மதிமுக சார்பில் போட்டியிடும் ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு!!!

MDMK
Last Modified சனி, 16 மார்ச் 2019 (08:48 IST)
மக்களவைத் தேர்தலில் ஈரோட்டில் போட்டியிடும் தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இடபெறுள்ள மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப்பட்டியலை வெளியிட்டார். இதில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் மதிமுக மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். வரும் 19ந் தேதி கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார். மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 2009ல் ஈரோடு எம்.பியாக தேர்ந்த்டுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :