செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:26 IST)

சென்னை மின்சார ரயிலில் இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை

சென்னை வேளச்சேரி - கடற்கரை மின்சார ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்குநாள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்ப்புதல் அளித்துள்ளார்.
 
இந்நிலையில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் வேளச்சேரி-கடற்கரை மின்சார ரயிலில், பயணித்த இளம்பெண் ஒருவருக்கு சத்யராஜ் என்ற வாலிபர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். அப்போது ரயிலில் பயணித்த ரயில்வே காவல்துறை அதிகாரி சிவாஜி என்பவர் துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை மீட்டதோடு சத்யராஜை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய காவலர் சிவாஜியை பாராட்டி, அவருக்கு 5000 ரூபாய் பரிசை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அளித்துள்ளார்.