1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (10:33 IST)

சென்னையில் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை கொருக்குப்பெட்டை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் ஜோசப் (54). அவர் இன்று காலை காசிமேடு துறைமுகத்தின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
இதனையடுத்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ஜோசப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் ஜோசப் பணிச்சுமையின் காரணமாக இறந்தாரா அல்லது தனிப்பட்ட பிரச்சனையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.