திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 29 ஜூன் 2024 (10:17 IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

fire explostion
சாத்துார் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியான நிலையில் அங்கு மீட்புக் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
அப்போது பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.  இந்த வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில்,  4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் பலர்  சிக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கு மீட்புக் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த எந்த தகலும் வெளியாக வில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.