திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 9 மே 2024 (15:59 IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.! பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு..!

Crackers
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 3 முதல் 4 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். 
 
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு அறைகள் தரைமட்டமாகின. 
 
பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விபத்தில் சிக்கிய 5 பெண்கள் உள்பட 8 பேர்  உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.