சகமாணவர்கள் முன் திட்டிய ஆசிரியர் - விரக்தியில் மாணவி தற்கொலை முயற்சி

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (10:56 IST)
திருநெல்வேலியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை திட்டியதால் மனமுடைந்த மாணவி பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
 
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் தம்புராட்சி(17), பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று பள்ளிக்கூடத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தம்புராட்சி, பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

இனி யூடியூபில் உங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வியும் கேட்கலாம்.. அறிமுகமாகிறது Ask YouTube..

டிகே சிவகுமார் முதல்வரானால் விஜய்க்கு பெரும் சவால்.. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா?

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments