1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A special train from velankanni to ernakulam

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Train
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
 
சனிக்கிழமைகளான ஜூலை 8,15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு  புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
 
ஞாயிற்றுக்கிழமைகளான ஜூலை  9, 16, 23, 30, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திடீரென இருமடங்காக உயர்ந்த பேருந்து கட்டணம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!