வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2023 (09:49 IST)

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில்: ரயில்வே துறை அறிவிப்பு..!

Train
ஒடிசாவில் இருந்து ஏற்கனவே ஒரு சிறப்பு ரயில் நேற்று கிளம்பி இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று அதிகாலையில் ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் சென்னை சென்னை வந்த நிலையில், இன்று மதியம் 1 மணிக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் புறப்படுகிறது  என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஒடிசா மாநில ரயில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை அடைந்த சென்னையை சேர்ந்தவர்கள் தற்போது சென்னைக்கு கிளம்ப தயாராக இருப்பதை அடுத்து அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் இன்னொரு சிறப்பு இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் சென்னைக்கு சிறப்பு ரயில் வரும் பயணிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva