Daily Horoscope
✕

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல்.. மத்திய அரசிடம் ரூ.9,618 கோடி நிதியுதவி கேட்ட தமிழக அரசு...

Written By SIVA
Updated: புதன், 18 நவம்பர் 2026 (09:18 IST)
தமிழ்நாட்டின் கடல்சார் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய நீர் வழி போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்தவும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
 இதன் ஒரு பகுதியாக, பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புதுடெல்லியில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் முக்கிய கடல்சார் மேம்பாட்டு திட்டங்களுக்காக மொத்தம் ரூ.9,618 கோடி நிதியுதவி வழங்குமாறு அவர் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த சந்திப்பில் மொத்தம் 5 முக்கிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்தை தொடங்குவதற்காக ராமேஸ்வரம் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.118 கோடி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் மீண்டும் இலங்கைக்கு கப்பலில் பயணிக்கலாம். 
 
மேலும், கடலூர் பசுமை ஆழ்கடல் துறைமுகத்திற்கு ரூ.4,700 கோடி, சென்னை - புதுச்சேரி இடையே படகு போக்குவரத்துக்காக ரூ.900 கோடி, பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைப்பிற்கு ரூ.2,700 கோடி மற்றும் பாம்பன் கால்வாயை ஆழப்படுத்த ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கக் கோரப்பட்டுள்ளது.
 
மத்திய அரசிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகையை பெற்று தமிழகத்தின் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல தவெக அரசு எடுத்துவரும் இந்த அதிரடி முயற்சிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
About Author
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More

எல்லாம் காட்டு

பிரியங்கா காந்தி சொன்னதை உடனே நிறைவேற்றிய விஜய்.. டெல்லியில் நடந்த சம்பவம்..

நிஷாந்தின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட டிரைவர்!. சிக்கியது எப்படி?...

முருகனை ஒப்பிட்டு விஜய்யை பாடினேனா? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்...

சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்.. மிதமான மழை மட்டும் தான்...

திட்டம் முடிந்து உடனே ரீசார்ஜ் செய்யாவிட்டா இன்கமிங் கால் நிறுத்தப்படும்; ஜியோ அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments