வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (20:16 IST)

சிறார் ஆபாச படத்தை பகிர்ந்தவர் கைது..

சிறார் ஆபாச படத்தை பகிர்ந்த இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்புவது, இண்டெர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்வது, பதிவேற்றம் செய்வது ஆகியவை குற்றம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி எம்.ரவி சமீபத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை கோவையில் கைது செய்துள்ளனர். அவர் பாலக்காடு சாலையில் டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது. முன்னதாக திருச்சியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிரிஸ்டோபர் என்பவர் சிறார் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.