வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (13:44 IST)

பொறியியல் கல்லூரி பேராசிரியரை வெடிகுண்டு வீசிக் கொலை செய்த மர்ம கும்பல்

பாளையங்கோட்டையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், செந்தில்குமார் மீது வெடிகுண்டு வீசி, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலை தடுக்கப்போன பேராசிரியரின் மனைவியையும் அந்த மர்ம கும்பல் தாக்கியது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்த தடயங்களை கைப்பற்றினர். செந்தில்குமாரின் உறவினரான, அதிமுக பிரமுகர் குமார் என்பவரைத் தான் அந்த மர்ம கும்பல் கொல்ல வந்ததென்றும், அவர் தப்பித்து ஓடியதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில்குமாரை கொலை செய்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.