செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (15:27 IST)

சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்

புகைப்பழக்கத்தை படிபடியாக ஒழிப்பதற்காக சட்டம் இந்தியாவுக்குத்தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’நியுசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

உலகில்  இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியுசிலாந்து தான்! புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியுசிலாந்து மக்களின் மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40ஆயிரம் கோடி(5 பில்லியன் டாலர்) குறையும். ஒரு சட்டத்தால் இவற்றை விட பெரிய நன்மையை ஒரு நாட்டுக்கு செய்து விட முடியாது. அதனால் தான் இது வரலாற்று சிறப்புமிக்க சட்டம்! 

புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியுசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை. எனவே, இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்!’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj