1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (08:22 IST)

விக்ரம், லாரன்ஸை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் புகழ் வெளிச்சம் பெற்றவர் இயக்குனர் ரத்னகுமார். இதையடுத்து அவர் பெயரில் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடை மற்றும் குலுகுலு ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றின.

இந்நிலையில் இப்போது அவர் ராகவா லாரன்ஸை வைத்து அடுத்த படத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் தயாரிக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடிப்பில் தன்னுடைய மற்றொரு உதவியாளர் இயக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளாராம்.