செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (22:28 IST)

தவறான உறவு வைத்திருந்தால் சிறைத் தண்டனை - இந்தோனேஷியாவில் புதிய சட்ட திருத்தம்

தவறான உறவு வைத்திருந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று இந்தோனேஷிய பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில்  அதிபர் ஜோகோ விடோடோ தலைமையிலான ஆட்சி  நடந்து வருகிறது.

இங்குள்ள குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அந்த நாட்டு ஆளும்கட்சி  பாராளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்துள்ளது.

அதில், ஒருவர் சட்டப்பூர்வ திருமணத்தை மீறி தகாத உறவு வைத்திருந்தால் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு, சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, புகாரை, கணவன், மனைவி, அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மட்டும்தான் போலீஸில் தெரிவிக்க முடியும் என்றும், இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அங்கு குடியேறிஉயுள்ள அனைத்து  நாட்டு மக்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த புதிய சட்டதிருத்தத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Edited By Sinoj