திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (13:14 IST)

எதுக்கும்மா இந்த பேனா? சிறுமியின் பதிலால் நெகிழ்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Kalaingar Pen
வேலூர் சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓடி வந்து பேனா கொடுத்து சிறுமி சொன்ன செய்த முதல்வரை நெகிழ செய்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா நினைவிடத்தின் அருகே கடல் பகுதியில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகின்றது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் இன்று சுற்றுபயணம் மேற்கொண்டார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுகளை முடித்துக் கொண்டு அவர் காரில் புறப்பட்டார். அப்போது காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவி யாழினி முதல்வரை காண ஓடி வந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓடிவந்த சிறுமி பேனா ஒன்றை அளித்துள்ளார். அதை வாங்கி கொண்ட முதல்வர் “எதற்காக இந்த பேனா?” என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுமி இந்த பேனாவை தனது சார்பில் கலைஞர் சமாதியில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட முதல்வர் கண்டிப்பாக செய்வதாக கூறி சிறுமியின் செயலால் நெகிழ்ந்துள்ளார்.

தற்போது மெரினாவில் பேனா சின்னம் அமைப்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K